செங்குன்றம் அருகே பாலவாயல் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா
பாலவாயல் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
செங்குன்றம் அடுத்த பால வாயல் பகுதியில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி பாலவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலவாயல் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 15-ம் ஆண்டு வருஷாபிஷேக திருவிழா ஆலய நிர்வாகிகள் தலைவர் ஜி.முனுசாமி, செயலாளர்எஸ். முனுசாமி, பொருலாளர் ஆர்.கரிகாளன் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மூலவர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பழங்கள் மற்றும் இனிப்புகளை படையலிட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் இத்திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் காலை,மதியம், இரவு நேரங்களில் பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீ முனீஸ்வரர் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலாநடைபெற்றது.இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.