கொளத்தூர் அருகே மது போதையில் கடையில் பொருட்களை சேதப்படுத்திய இருவர் கைது

கொளத்தூர் அருகே மது போதையில் கடையில் பொருட்களை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-08-28 04:29 GMT

சென்னை மாதவரம் அடுத்த கொளத்தூர் சிவானந்தம் தெருவில் உள்ள டைல்ஸ் கடை மற்றும் தனியார் உணவகத்தில் மதுபோதையில் இளைஞர்கள்  பொருட்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இது குறித்து சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் உதவியாளர் கார்த்திகேயன், மற்றும் காவலர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் போது கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அதில் சென்னை கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அருண்குமார், கொளத்தூர் கண்ணகி நகர் கம்பர் தெருவை சேர்ந்த கிஷோர் ஆகிய இருவரும் ஹோட்டல் மற்றும் டைல்ஸ் கடையில் புகுந்து டைல்ஸ்களை உடைத்து வாகனத்தை சேதப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை யடுத்து கொளத்தூர் காவல் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்..

Tags:    

Similar News