சென்னை கோயம்பேட்டில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

சென்னை கோயம்பேட்டில் கஞ்சா போதையில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-10 05:07 GMT

கைது செய்யப்பட்ட ஜாட்வின்.

கோயம்பேட்டில் கஞ்சா போதையில் போக்குவரத்து பெண்காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு அருகே பெண் காவலர் ஒருவர் சாலையில் பணியில் இருந்த போது நோ என்ட்ரி வழியாக இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். அப்போது அந்த இருவரை போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் நிறுத்தி விசாரித்துள்ளார். இதில் இருவரும் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்ட சசிகுமார்.

இதனையடுத்து அவர்களிடம் இருசக்கர வாகன ஆவணங்களை கேட்டபோது இரண்டு போதை ஆசாமிகளும் பெண் காவலரை கொன்று விடுவேன் என மிரட்டி தனது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இது குறித்து பெண் காவலர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜாட்வின்( வயது 21) மற்றும் ரெட்ஹில்ஸ் வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார்( வயது 19) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் பெண் காவலரை மிரட்டி இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News