செங்குன்றம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
நாரவாரி குப்பத்தில் 34-ஆம் ஆண்டு ஸ்ரீ சக்தி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகே 9.அடி உயரம் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஜெயசந்திரா-தட்சணாமூர்த்தி, தேவசுதா-கணேசன் ஆகியோர் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ கைலாஸ் ஆசிரமம் மாதாஜி யதீஸ்வர் குமாரப்பிரியாம்பா திருவிளக்கு பூஜையினை மூலமந்திரங்கள் முழங்க நடத்திவைத்தனர். இதணைத்தொடர்ந்து விநாயகர் சுவாமிக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பழங்கள் மற்றும் இனிப்புகளை படையலிட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் விரதம் இருந்த தாய்மார்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து தங்களின் நேர்த்திகடனை பூர்த்தி செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் பொறுப்பாளர்கள் கணேசன், சுந்தரம், நாகராஜன், ஹரிஷ், மணிகண்டன், நரேஷ், கோபாலகிருஷ்ணன், கண்ணன், ராஜா, சரவணன், சதீஷ்குமார், வெங்கடேசன் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முடிவில் ராமசந்திரன் -தமயந்தி குடும்பத்தினர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.