தமிழகம் முழுவதும் 539 கோயில்களில் மூன்று நாட்கள் மாஸ் கிளீனிங்: தரிசனம் கிடையாது!!
தமிழகம் முழுவதும் 539 திருக்கோயில்களில் மூன்று நாட்கள் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.;
கோவில்களை தூய்மை படுத்தும் போது
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களான பழநி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வர், உள்பட 539 திருக்கோயில்களில் மூன்று நாள்கள் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
539 கோயில்களில் மாஸ் கிளீனிங் நேற்று தொடங்கியது. கோயில்களில் உள்ள பிராகாரம், நந்தவனம், திருக்குளம், தண்ணீர் தொட்டி, மதில் சுவர், விமானங்களில் உள்ள செடிகள் அகற்றும் பணிகள், தரைதளம், மண்டபம், துாண்கள் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணிகளும்,மேலும், பூஜை சமான்கள் சுத்தம் செய்தல் ஆகியவை மாஸ் கிளினிங் மூலம் திருக்கோயில்களில் ஒப்பந்த பணியாளர்கள், உழவாரப் பணியாளர்கள், திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு துாய்மைப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.