தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து இருந்தால் தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலாராது: டி.ஆர்
தமிழ்நாட்டை எப்போதும் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கபட்ட திமுக மற்றும் அதிமுக தான் ஆளும் என்றார் டி.ராஜேந்தர்;
தற்போதுள்ள பாஜக தலைவர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்தால் தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலராது என்றார் லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை தி நகரி உள்ள இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி. ராஜேந்தர், அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் பேசியதாவது: தமிழ்நாட்டை எப்போதும் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கபட்ட திமுக மற்றும் அதிமுக தான் ஆளும். லட்சிய திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை, தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுபடுத்தியப்பின்னரே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராவோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழத்தமிழர்கள் வாழமுடியாமல் தவிக்கின்றனர், உணவுக்கு குடி தண்ணீருக்கு கூட கிடைப்பதில் பிரச்னை உள்ளது.
பிரதமர் மோடி, ஈழ தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டுமென தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழியில் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக என்ற கட்சியியை வியூகம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரன் ஆகியோர் அழித்துவிட்டனர். ஈழ விவகாரத்தில் காங்கிரஸுடன் கைகோர்த்ததால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது இன்னமும் கோபம் குறையவில்லை. உள்ளாட்சித் தேர்தலுகாக கொரொனா போய்விட்டதா என்பதை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும் என்றார் டி. ராஜேந்திரன்.