புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

புழல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.;

Update: 2024-05-14 05:45 GMT

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார சுமார் 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திடீரென மின்மாற்றி ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக மின் இனைப்பு துண்டிக்கப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News