கட்டி முடிக்கப்பட்ட அடிப்படை வசதி திட்ட பணிகளை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்!

புள்ளிலையன் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் திட்டப் பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்.

Update: 2024-03-15 04:30 GMT

மாதவரம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக திட்டப்பணிகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ.வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்றத் தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சியில் புதிய தார்சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சமுதாயக் கழிவறை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ், சமூக சேவகரும் சென்னை வடகிழக்கு மாவட்ட பிரிதிநிதியுமான ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார்.  புள்ளிலையன் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரங்காகார்டன், சி.ஆர்.பி.நகர் மற்றும் ஆரூண் உல்லாச நகர் ஆகிய பகுதிகளில் போடப்பட்டுள்ள புதிய தார் சாலைகள், 15-வது நிதிக்குழு மானியத்தில் ஆரூண் உல்லாச நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பாப்பாரமேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கழிவறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் புள்ளிலையன் ஊராட்சியில் இயங்கிவரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 6 தையல் எந்திரங்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட கட்சியின் கிளை செயலாளர்கள் மனோகரன், சதீஷ், ஜனார்த்தனன், சரவணன், பத்மநாபன், செல்வம், வரதன், ஊராட்சி செயலர் பொன்னையன், பணியாளர்கள் ஜெயந்தி, நாகஜோதி, பார்த்திபன், சூர்யா, சுதா,  கலைமணி, சுரேஷ், கதிரவன், விக்னேஷ், யோகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும்  ரங்காகார்டன், சி.ஆர்.பி.நகர், டீச்சர்ஸ் மார்டன்டவுன், ஆருண் உல்லாச நகர் பகுதிகளின் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News