மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

செங்குன்றம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-15 04:15 GMT

செங்குன்றம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செங்குன்றம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் இயங்கிவரும் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாகல்விநாதன், கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்விமதுரைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக புழல் வட்டார கல்வி அலுவலர் பால்சுதாகர் கலந்துகொண்டு 2024-2025 -ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பேரணியை துவக்கி வைத்தார்.

பின்னர் இப்பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி முதல் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் பேரணியாக சென்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்வமணி, அன்பு, திருஞானசம்பந்தன், பிரேமாபச்சையப்பன், உமாமகேஸ்வரிபிரசாத், பள்ளி மேலாண்மை குழு தலைவி தீபா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள்,

அழிஞ்சிவாக்க கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.


Similar News