ஸ்ரீதேவி நீலாதேவி சமேத வெங்கடாச்சலபதி ஆலய புரட்டாசி திருவிழா

பொத்தூர் கிராமத்தில் ஸ்ரீதேவி நீலாதேவி சமேத வெங்கடாச்சலபதி ஆலய திருவிழா சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-10-13 06:15 GMT

படம்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் பொத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி நீலாதேவி சமேத வெங்கடாச்சலபதி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு மற்றும் உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன்,பன்னீர், குங்குமம், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பாமக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பிஸ்.சபாபதி குடும்பத்தினர்கள் சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் சகாதேவன் மற்றும் பாமக நிர்வாகிகள் மாரி, பன்னீர்செல்வம், ராஜேஷ், சுரேஷ், அரவிந்த், சுந்தர்ராஜன், பிரவீன்,குல்அருள், உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், ஆலய நிர்வாகிகள் , சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News