ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஸ்ரீ கிருஷ்ணர் இன்று அதிகாலையில் பரமபதவாசலின் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு எம்பெருமானாக பக்தர்களுக்கு காட்சி தந்தார்

Update: 2022-01-13 08:00 GMT

செங்குன்றம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

செங்குன்றம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள்  சுவாமி  தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா திருக்கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெள்ளி கவசத்துடன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு பரமபதநாத அலங்காரம் செய்யப்பட்டு இன்று அதிகாலையில் பரமபதவாசலின் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு எம்பெருமானாக பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

அப்போது பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை பக்தி பரவசத்தில் வணங்கினர். பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாலாஜி சுவாமிகள் மற்றும் வெங்கட்ராமன் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிருஷ்ண பரமாத்மாவிற்கு பல்வேறு தீப தூப ஆராதனைகளும் அபிஷேகங்களும் செய்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செங்குன்றம் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News