செங்குன்றம் அருகே ஸ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஊராட்சியில் ஸ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து காப்பு கட்டி பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் 25-ம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் பொன்னியம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மன்காப்பு, கலசகாப்பு, கரசுகாப்பு, குமாரமக்கள் காப்பு, அம்மன் பூங்கரகம் எடுத்தல், 108 பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு தாலிக்கூரை அளித்து தாய் வீட்டு சீதனம் எடுத்தல் மற்றும் கூழ்வார்த்தல், அலகு பானை எடுத்தல் போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட காப்புகட்டிய பக்தர்கள் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் ஆலய அனைத்து நிலை பொறுப்பாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் தலைவர் ஆனந்தன், செயலாளர் பத்மநாபன், பொருலாளர் துரைகனகவேல், துணைத்தலைவர் கனகராஜ், துணை செயலாளர் கர்ணால்சூரியா, கமிட்டி தலைவர் கவியரசன், கமிட்டி உறுப்பினர்கள் நாகராஜ், நந்தி, விஜயன், திருநாவுக்கரசு, பன்னீர்தாஸ், சுரேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் லிங்கேஸ்வரி தேவராஜ், சுதாகர், லட்சுமி ஜெயசீலன், ஆலய பூசாரி வளர்மதி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.