ஸ்ரீ ஆதி வாராஹி அம்மன் மகா கும்பாபிஷேகம் விழா
பம்மதுகுளம் ஸ்ரீ ஆதி வாராஹி அம்மன் மகா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்களை பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியம், பம்மதுகுளம் ஊராட்சி ஈஸ்வரன் நகர் மற்றும் கணபதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதி வாராஹி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
ஆலய நிர்வாகிகள் தலைவர் சுதாகர், செயலாளர் பிரபாகரன், பொருலாளர் துர்காபிரசாத், துணைத்தலைவர்கள் முருகன், ஆனந்தகுமார் துணை செயலாளர்கள் மனி, பிரபு, கௌரவத்தலைவர்கள் சரவணன், வேங்கையன் ஆலோசகர்கள் அருணாச்சலம், ராமநாதன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், நவக்கிரகம் ஹோமம், சிலை கண் திறப்பு, கோபூஜை, தன்வந்தரி ஹோமம், சுமங்கலி பூஜை, துர்கை பூஜை போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலசங்களை மேளதாளத்துடன் ஆலய மாடவீதி உலாவந்து விமானம் மற்றும் மூலவர் அருள்மிகு ஸ்ரீ ஆதி வாராஹி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆலய பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.