சென்னை மாதவரம் அருகே தந்தையை கொலை செய்த அமெரிக்க வாழ் மகன் கைது

சென்னை மாதவரம் அருகே தந்தையை கொலை செய்த அமெரிக்க வாழ் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-12 03:00 GMT

சென்னை மாதவரம் அடுத்த பால்பண்ணை மாத்தூர் எம். எம். டி .ஏ. 2 வது பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (81) இவர்  பி. எஸ் .என் .எல் . தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி பாச்சிபாய் இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகன் சிவகுமார் (49) என்பவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார் . இரண்டாவது மகன் நரேந்திர குமார்( 45) சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மூன்றாவது மகன் செல்வகுமார் (42) திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார் . இளைய மகன் செந்தில்குமார் (40) இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த கொரனோ நோய் காலகட்டத்தில் சிவக்குமார் தனது குடும்பத்தினரை அமெரிக்காவில் வைத்துவிட்டு இவர் மட்டும் வேலை இல்லாத காரணத்தால் சென்னை வந்து பெற்றோரிடம் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி அன்று இளைய மகன் செந்தில்குமாருக்கு வரன் பார்த்து சரியாக அமையாத காரணத்தினால் குடும்பத்தில் உள்ளவர்கள் மூத்த மகன் சிவகுமாரிடம் நீ இங்கேயே இருப்பதால் சரியாக வரன் அமையாது. ஆதலால் உடனை வெளிநாடு சென்று விடுமாறு கூறியதால் குடும்பத்திலுள்ளவர்களுடன் சிவகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் ஆத்திரத்தில் தந்தையை கீழே தள்ளியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக குடும்பத்தினர் பாலசுப்பிரமணியனை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் சிகிச்சைக்காக சேர்த்தகாக கூறப்படுகிறது.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 8ஆம் தேதி அன்று மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனையின் தகவலறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு விபரம் தெரிவித்தனர்.அதன்பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.

மேலும் மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த பாலசுப்பிரமணியன் பலவந்தமாக தாக்கப்பட்டு தலையில் அடிபட்டதால் உயிரிழந்ததாக தகவல் வந்தது . உடனே மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்தி இந்த தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி சம்பவத்திற்கு காரணமான சிவகுமாரை கைது செய்தனர் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News