செங்குன்றத்தில் மகளிர் தின வாக்கத்தான் பேரணி
தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு செங்குன்றத்தில் வாக்கத்தான் பேரணி நடந்தது
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ரேலா மருத்துவமனை சார்பில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாக்கத்தான் பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்த பேரணியை செங்குன்றம் சட்டம் ஒழுங்கு காவல் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் ரேலா மருத்துவமனை சேர்மன் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் மஸ்தான் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியில் மருத்துவமனை ஊழியர்கள், பாடியநல்லூர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆல்பா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள், உமையாள் செவிலியர் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாடிய நல்லூரிலிருந்து செங்குன்றம் காவல் நிலையம் வரை பெண்ணுரிமை காப்போம் ஆரோக்கியமான எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் ஆரோக்கியமான வாழ்க்கையே அழகான எதிர்காலம் என்பது போன்ற பெண்களின் ஆரோக்கியம் காக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.