செங்குன்றம் பேரூர் தி.மு.க. சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
செங்குன்றம் பேரூர் தி.மு.க. சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
செங்குன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செங்குன்றம் ஏழாவது வார்டில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் பேரூர் செயலாளர் ராஜேந்திரன்.
தமிழகம் முழுவதும் நேற்று திமுக தலைவரும் தமிழக முதல் அ மைச்சருமான முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் மிக சிறப்பாக கொண்டாடினார்கள். கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆலோசனையின் பேரில் செங்குன்றம் பேரூர் 7வது வார்டு தி.மு.க. சார்பாக கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் கழக கொடியேற்றி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு, குளிர்பானம் வழங்கப்பட்டது.
7வது வார்டு செயலாளர் இ.சுகுமார், பேரூர் கழக துணைச் செயலாளர் எஸ்.முனீஸ்வரி சுகுமார், வார்டு பொருளாளர் எம்.எஸ்.கே. யுவராஜ், இளைஞரணி அமைப்பாளர் பி.வசந்த் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
செங்குன்றம் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.இ.ஆர். விப்ரநாராயணன், பேரூர் அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், துணைச் செயலாளர் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி. சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் என்.எம்.டி. இளங்கோவன், ஆர்.எம்.பி. குமார், பி.அன்பு, ஆர்.டி.சுதாகர், பி.பாலசுப்பிரமணி, ஆர்.ஆர். குணாளன், அறிவுநிதி, பி.சுந்தரமூர்த்தி, பி.பாபு, எஸ்.சக்திவேல், யு.தினகரன், எஸ்.முருகன், பி.திருமலை, ராஜாராம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாணவர் அணி அமைப்பாளர் எம்.மோகன்குமார் நன்றி நவின்றார்.நிகழ்ச்சி ஏற்பாட்டை 7வது வார்டு தி.மு.க.வினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.