செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-04-02 07:30 GMT

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் தமிழரசிகுமார் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி துணைத்தலைவர் விப்ரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளும் போலிரோ வாகனத்தின் நான்கு டயர்கள் பழுதடைந்துள்ளதை அவறை மாற்றி புதிய நான்கு டயர்களை பொதுநிதியிலிருந்து வாங்கி கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ள மன்றத்தின் பார்வைக்கு ஒப்புதல் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாதவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆடு அடிக்கும் தொட்டி கட்டிடத்தினை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி பொது நிதியிலிருந்து வழங்கிடவேண்டி மன்றத்தின் பார்வைக்கு ஒப்புதல் வைக்கப்பட்டது. கூடுதலாக கொசு ஒழிப்பு புகைபோக்கி இயந்திரம் ஒன்று வாங்கி கொள்ள பேரூராட்சி பொதுநிதியிலிருந்து வழங்க மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தெருக்களில் உள்ள பெயர் பலகைகள் பழுதடைந்து உடைந்துவிழுகிறது மேற்படி துருப்பிடிக்காத இரும்பிளான பெயர் பலகைகளை புதியதாக நிறுவிடவும். அத்துடன் தெருக்களின் பெயர்கள் கிழிந்துவிட்டதை அகற்றி புதியதாக ஒட்டிடவும் அதற்கான தொகையினை பேரூராட்சி பொதுநிதியிலுந்து வழங்க மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மற்றும் 11-வது வார்டு திருவள்ளூர் தெரு முருகன் கோயில் அருகே உள்ள குடும்பங்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. எனவே ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி பைப்லையன் விஸ்தரிப்பு செய்து குடிநீர் கிடைக்க ஆவன செய்ய பேரூராட்சி துணைத்தலைவர் அளித்த கடிதம் மன்றத்தின் பார்வைக்கு ஒப்புதல் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 12-வது வார்டில் பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து போடவும், 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பழைய குடிநீர் இணைப்புகளை அகற்றி புதியதாக குடிநீர் இணைப்புகள் போடவேண்டி கவுன்சிலர் ஸ்ரீதேவிதேவராஜ் கோரிக்கை வைத்தனர். இதேபோல் பல்வேறு திட்ட பணிகள் செய்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் கார்த்திக்கோட்டீஸ்வரன், சகாதேவன், பபிதாபால்ராஜ், ஸ்ரீதேவிதேவராஜ், வினோதினிபாலாஜி கோமதிபாஸ்கர், லீலாவதிசாந்தகுமார், மோகன், லதாகணேசன், தெய்வானைகபிலன், ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் மதியழகன் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Similar News