புழல் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த 5 டன் செம்மரக் கட்டை பறிமுதல்
புழல் பகுதியில் கண்டெய்னர் லாரியில் பதுக்கி வைக்கப்பட்ட 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்;
புழல் பகுதியில் பகுதியில் கண்டெய்னர் யார்டில் பதுக்கி வைக்கப்பட்ட 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்து குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த புழலில் அம்பத்தூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான லாரிகள் மற்றும் கண்டைனர் நிறுத்தும் யார்டு இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் சரக்குகளை ஏற்றி வரக்கூடிய 50க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் கண்டெய்container yardனர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் கொண்டு செல்லப்படும். இந்த கிடங்கில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப்பிரிவு போலீசார் லாரி நிறுத்தும் யார்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கேரள பதிவெண் கொண்ட லாரியில் சுமார் 5டன் எடை கொண்ட முதல்தர செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த, குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் அவற்றை புழல் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த செம்மரக்கட்டைகள் ஆந்திராவில் இருந்து கடத்தி கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த சரக்கு முனையத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரியின் ஓட்டுநர், உரிமையாளர் யார் எனவும் இந்த கடத்தலில் லாரி யார்டின் உரிமையாளருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.