ராம நவமியை முன்னிட்டு சீதாராமன் திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ ராம நவமி முன்னிட்டு செங்குன்றம் அருகே ஸ்ரீ லட்சுமி கணபதி ஆலயத்தில் ஸ்ரீ சீதாராம திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.;

Update: 2023-03-31 06:00 GMT

ஸ்ரீ ராம நவமி முன்னிட்டு செங்குன்றம் அருகே ஸ்ரீ லட்சுமி கணபதி ஆலயத்தில் ஸ்ரீ சீதாராம திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சி ரங்கா கார்டனில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி கணபதி ஸ்ரீ மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ சீதாராம திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னதாக கோமாதா பூஜை, துளசி பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் யாக சாலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பால், பயிர், சந்தனம், ஜவ்வாது, இளநீர், சீதாராமர் சிலைகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் வண்ண மலர்களால், பட்டு உடைகளால் அலங்கரிக்கப்பட்டு சீதாராமர் தம்பதியர்களாக நடனமாடி மாலை மாற்றிக் கொண்டு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

பின்னர் தீப, தூப ஆராதனையில் ஸ்ரீ ரங்கா கார்டன் நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News