புழல் ஏரியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு
Body Recovery - அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.;
புழல் ஏரி.
Body Recovery - திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் மிதப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற செங்குன்றம் சரக போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினர்கள் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசினரா என்கின்ற பல்வேறு கோணத்தில் செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2