கழிவு நீருடன் சாலையில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

Rainwater stagnant on roads with waste water: motorists and public suffer

Update: 2023-03-25 05:15 GMT

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சர்வீஸ் சாலையில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிற்கும் காட்சி.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலைக்கு அருகாமையில் சர்வீஸ் சாலை ஒன்று அமைக்கப்பட்டு இச்சாலை வழியாக புள்ளிலைன் ஊராட்சி பொது மக்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் செல்ல எதுவாக இருந்து வருகிறது.

இந்த சர்வீஸ் சாலை ஒட்டி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட மழை நீர் செல்ல வடிகால் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் பேரூராட்சி குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும் கழிவுநீர் பைப்புகள் மூலம் திறந்து விட்டு பயன்படுத்தி வந்தனர். அப்படி திறந்து விடப்படும் கழிவு நீரானது புழல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாயில் சென்று கலந்து வெளியேறும்.

இந்த கால்வாயை செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து கால்வாயில் தூர் வாராத காரணத்தினால் சமீபத்தில் பெய்த சிறிய மழை நீருடன் கழிவு நீர் கலந்து இந்த சர்வீஸ் சாலை மற்றும் புள்ளிலையன் ஊராட்சி பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்பதால் குளம் போல் காட்சி அளிப்பதோடு துர்நாற்றம் வீசுகிறது.

இப்பகுதி மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த இந்த சர்வீஸ் சாலையை வாகன ஓட்டிகளும் புள்ளிலைன் ஊராட்சி மக்களும் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலுக்கு செங்குன்றம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.

தற்போது இவ்வழியை கிராம பொதுமக்களும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் சர்வீஸ் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து புள்ளிலைன் ஊராட்சியைச் சார்ந்த மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷிடம் புகார் அளித்தார். இதன் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்விரமேஷ் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி அதிகாரியிடம் இந்தப் பிரச்சனை குறித்து எடுத்துக் கூறினர். அதன் பேரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து தற்காலிகமாக அடைப்புகளை சரி செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இக்கால்வாயில் அடிக்கடி இது போன்ற நிலைமை நீடித்து வருவதாகவும் இதற்கு நிரந்தரமாக தீர்வு காண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News