புழல் சிறைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்;

Update: 2023-06-08 09:15 GMT

பைல் படம்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறையில் இருந்த  ஆயுள் தண்டனை  கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (66). இவர் திருமுல்லைவாயல் பகுதியில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில் இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்ததால் கடந்த வாரம் சிறை மருத்துவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .

அங்கு அவருக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்.நேற்று இரவு மீனாட்சி சுந்தரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புழல் சிறைச்சாலை... ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்ற தகுதியுடன் 2006-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்ட புழல் மத்திய சிறைச்சாலையும் இதற்கு விலக்கல்ல. நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில், 300-க்கும் குறையாத தண்டனைக் கைதிகள், 2,003 விசாரணைக் கைதிகள், 150 பெண் கைதிகள் என மூன்றுவிதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிறைகளுடன் ஒரே நேரத்தில் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி இங்கு உள்ளது. 30 அடி உயரம் கொண்ட புழல்சிறை சுவரின்மீது ஒன்றரை அடி உயரத்துக்கு மின் வேலியும் உண்டு. சிறை வளாகத்தைச் சுற்றி 15 கண்காணிப்புக் கேமராக்களுடன், கண்காணிப்புக் கோபுரங்களும் இருக்கின்றன.

புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள், தனித்தனி நிர்வாகம் என செயல்படுகிறது. ஒவ்வொரு பிளாக்குக்கும் 3 முதல் 4 காவலர்கள்வரை பாரா பார்ப்பார்கள். 24 மணிநேரமும் இது நடக்கும். பொதுவாக மற்ற பிளாக்குகளுக்கு வார்டனும் ஹெட் வார்டனும் பொறுப்பாக இருப்பர். ஆனால் உயர் பாதுகாப்பு பகுதிக்கு ஹெட் வார்டனுக்கு மேல் அசிஸ்டென்ட் ஜெயிலர், டெபுடி ஜெயிலர் இருப்பார்கள். இவர்களுக்கு மேல் ஜெயிலர் இருப்பார். இத்தனை பாதுகாப்பையும் பார்த்து விட்டுத்தான் அசம்பாவிதங்களும் இங்கே சாதாரணமாக நடக்கின்றன. 

Tags:    

Similar News