சோழவரம் அருகே அலமாதி செங்காளம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா

சோழவரம் அருகே அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-09-29 09:15 GMT

கோவில் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவரம் அருகே அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் 11-ம் ஆண்டு புரட்டாசி மாத இரண்டாம் வாரத் திருவிழா ஆலய ஸ்தாபகர் சக்திசரவணன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ திருவெங்கடமுடையான் திருஉருவ படத்திற்கு துளசி மற்றும் வண்ணமலர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஏழுவகையான அறுசுவை அன்னம்,இனிப்பு மற்றும் பழங்களை படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீ ஆனந்த நிர்தன பஜனை மற்றும் ஸ்ரீ ஹரி பந்த சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள், தொண்டரணி, மகளிரணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பெருமாள் நாமம் கூறி அர்ச்சனைகள் செய்துசுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் ஏழுவகையான அறுசுவை அன்னதானத்தை பக்தர்களுக்கு வழங்கினர்.

Tags:    

Similar News