லோக்சபா தேர்தல் :புழல் ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
Pulal Union Dmk Agents Meet புழல் ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார். மற்ற நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.;
Pulal Union Dmk Agents Meet
இந்தியாவில் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.இதற்கான ஆயத்த ஏற்பாடுகளை தமிழகத்திலுள்ள அனைத்து பிரதான கட்சிகளும் துவங்கிவிட்டது. அந்த வகையில் திமுகவும் அதனுடைய நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தி பணிகளை விரைவு படுத்திட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சி சமுதாய நலகூடத்தில் சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம், மாதவரம் தொகுதி பார்வையாளர் டாக்டர் சந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு செயல்படுவது, வாக்காளர் பட்டியல்களை சரிபார்ப்பது மற்றும் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் பாக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
எனவே சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாக முகவர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் அவைத்தலைவர் செல்வமணி, துணைசேர்மன் சாந்திபாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்செல்விரமேஷ், ஜானகிராமன், துணைத்தலைவர் கலாவதிநந்தகுமார் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.