மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சென்னையில் தமிழக மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தற்காப்பு கலைகளில் முதன்மையானது கராத்தே. கராத்தே கற்றுக்கொண்டால் ஆயுதத்தால் தாக்க வருபவர்களை கூட நமது வலுவான கை மற்றும் கால்களால் தடுத்து நிறுத்தி நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கராத்தே பயில்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள செயின்ட்தாமஸ் மவுன்ட் மான்ட்போர்ட் உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இப்போட்டியில் பல்வேறு மாவட்டத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதில் சென்னை அடுத்த ஆவடியில் உள்ள சூப்பர் பவர் ஜப்பான் சோட்டோகான் கராத்தே டூ இந்தியா பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் சென்சாய் தாமோதரன் தலைமையில் 10 கராத்தே வீரர்கள் குமித்தே மற்றும் கட்டா பிரிவுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய. திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் ஸ்டண்ட்மாஸ்டருமான ஜாக்குவார்தங்கம் கலந்துகொண்டு கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம், கோப்பு மற்றும் சான்றிதழ் வழங்கி வெற்றி பெற்றவரை வாழ்த்தி பேசினார். இதனைத்தொடர்ந்து மாநில அளவில் வெற்றி பெற்ற ஆவடியில் உள்ள சூப்பர்பவர் ஜப்பான் சோட்டோகான் கராத்தே டூ இந்தியா பயிற்சி பள்ளியின் சகமாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.