முன்பதிவு செய்தால் வீடுதேடி வரும் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி பலே ஐடியா!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முதியோருக்கு வீட்டுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.;
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. சென்னையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலரும் ஊசி போட முன்வருவதில்லை.முன்னதாக சென்னையில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில்,சென்னையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முன்வந்துள்ளது.
அதன்படி தடுப்பூசி செலுத்த விரும்பும் முதியோர்கள் 044- 2538 4520, 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பதிவு செய்த வரிசைப்படி வீடுகளுக்கே சென்று தடுப்பூசிம போடப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.