மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறப்பு விழா
சென்னை அருகே, மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.;
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
சென்னை அருகே, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மோரை ஊராட்சிக்கு உட்பட்ட, புதிய கன்னியம்மன் நகரில், விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா, மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர் திவாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஜி கே எஸ் குரூப்பின் நிறுவனத் தலைவர் ஹரி பிரசாத் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து, புதிய விளையாட்டு திடலை திறந்து வைத்தார். பின்னர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் ராபர்ட், செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் முதல் விளையாட்டாக கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர் திவாகரன் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் கார்த்திக் வார்டு உறுப்பினர்கள் சரவணன், முருகன், பாண்டுரங்கன், பாஸ்கர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் குமார் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.