வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் தாக்குதல்: இருவர் கைது

புழல் அருகே வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கிய வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்

Update: 2023-06-09 03:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் அடுத்த கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் 30. இவர் கார்பென்டர் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பச்சையப்பன் தமது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது ஆறு இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் கூச்சலிட்டபடியே வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என அவர்களிடம் பச்சையப்பன் கேட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து இளைஞர்கள் அதே பகுதியை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் காந்தராஜை அழைத்து வந்துள்ளனர். அங்கு வந்த காந்தராஜ் எங்க ஏரியா பசங்களை கேள்வி கேட்பதற்கு நீ யார் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் பச்சையப்பன் வீட்டிற்கு வந்த காந்தராஜ் அவதூறாக பேசி, கைகளாலும், கிரிக்கெட் மட்டையாலும் தாக்கியதில் பச்சையப்பனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பச்சையப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து இதுகுறித்து பச்சையப்பன் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிமுக வட்ட செயலாளர் காந்தராஜ், கார்த்திகேயன் ஆகிய இருவர் மீதும் அத்துமீறி நுழைத்தல், ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

அத்துமீறி வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுக வட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News