ஓம் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடிதிருவிழா
செங்குன்றம் அருகே ஓம் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.;
செங்குன்றம் அருகே ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி காமராஜர் நகர் மஞ்சம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஓம் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு கடந்து முதலாம் ஆண்டு ஆறாவது வார ஆடிமாத திருவிழா மஞ்சம்பாக்கம் ஓம் எல்லையம்மன் ஆலய அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் பதிஅலங்காரபூஜை, கூழ்வார்த்தல்,கும்பம் படையல்பூஜை போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர்,மஞ்சள்,குங்குமம், சந்தனம்,பன்னீர்,தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப,தூப,ஆராதனை காண்பிக்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பொங்கல் வைத்து, அர்ச்சனைகள் செய்து அவர்களின் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம்,அறுசுவை அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் அம்மனை பல்வேறு பூக்களாலும், ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்களும் விழா குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.