விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், புதிய ரேஷன் கடை திறப்பு

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், புதிய ரேஷன் கடையை, சுதர்சனம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.;

Update: 2022-12-17 00:15 GMT

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், புதிய ரேஷன் கடையை, சுதர்சனம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், சைதாப்பேட்டை தாலூகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா,  விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பாரதிசரவணன் தலைமையில் நடைபெற்றது.

புழல் ஒன்றிய செயலாளர் வக்கீல் சரவணன், சென்னை பொது விநியோகத் திட்ட இணைப்பதிவாளர் ஆனந்தி, வடக்கு நகர துணை ஆணையர் மதியழகன், வடக்கு பண்டகசாலை பிரதம துணை பதிவாளர் மகேஸ்வரி, புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் மம்மு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக, மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தனர். பின்னர் கடையில் உள்ள பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதில் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கரன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வமணி, துணை செயலாளர் ராஜேஸ்வரி எத்திராஜ், மாவட்ட பிரதிநிதி  ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இனியன், இளைஞரணி டேவிட், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தி நாகராஜன் மற்றும் ஊராட்சி வார்டு கழக செயலாளர்கள் தங்கராஜ், மல்லிராஜா, டில்லியார், பரிமளசெல்வம், கோவிந்தராஜ், காமராஜ், நாகராஜ், சீனு, நித்தியானந்தம், அருண், தனஞ்சயன், சதீஷ், எழிலன், சுரேஷ், பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு எம்எல்ஏ சுதர்சனம், அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.


Similar News