மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது..!

சென்னை கோயம்பேட்டில் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2024-06-12 03:45 GMT

மசூதி இடிபபி எதிர்த்து போராட்டம் மத்திய இஸ்லாமிய மக்கள்.

கோயம்பேட்டில் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். 

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 3வது செக்டார் பகுதியில் மஸ்ஜித்-இ-ஹிதாயா என்ற மசூதி அமைந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான ஒப்புதல் இல்லாமல் கட்டுப்படுவதாக, கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளூர் அதிகாரிகளால் இந்த மசூதியின் கட்டுமான பணிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதை மீறி சட்டவிரோதமாக மசூதி கட்டப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மசூதி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்ததுடன், அதனை இடிக்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையே உச்சநீதிமன்றமும் கடந்த பிப்ரவரி மாதம் உறுதிசெய்தது. அத்துடன் நடப்பு ஆண்டு மே 31ஆம் தேதியுடன் மசூதியை இடிக்க வேண்டும் என கால அவகாசமும் கொடுத்திருந்தது. கால அவகாசம் முடிவடைந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதிக்குள் மசூதியை இடித்துவிட வேண்டும் என காவல்துறை தரப்பிலிருந்து மசூதி நிர்வாகத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி மசூதி இடிப்பிற்கு எதிராக போரட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் மசூதி இருக்கும் நிலம் மிக குறுகிய இடம்.  அது பேருந்து நிலையத்தின் இடம் என்று கூறுகிறார்கள். ஆனால் மசூதியைச் சுற்றி 2000 வீடுகள் உள்ளன.  இருந்தாலும் மசூதியை மட்டும் ஆக்கிரமிப்பு என்கின்றனர்.


இந்த இடத்தை முறைப்படி ரூபாய் 43 லட்சம் கொடுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளோம். ஆனால் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட சில சமூக விரோதிகள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.  இஸ்லாமியர்களுக்கு எதிராக சமூக விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் இதை செய்துள்ளனர்” என்று கூறினர்.

மேலும், அனுமதியின்றி பேனர் கொண்டு வந்ததாக போலீஸார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுகணக்கான இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

Tags:    

Similar News