இருசக்கர வாகன விபத்து: லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2022-05-21 02:30 GMT

வாகன விபத்தில் உயிரிழந்த வாலிபர் மணிகண்டன்.

மாதவரம் அருகே மணலியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 34. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் பிளம்பராக பணிபுரிவதால் கடந்த ஒருவாரமாக சென்னை மதுரவாயலில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மதுரவாயலில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மணலி நோக்கி செல்லும் வழியில் மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே இவருக்கு முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாரியதில் கீழே விழந்து விபத்து ஏற்பட்டு லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசார் உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுனர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நடராஜன் வயது 51 என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News