செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்ட எம்எல்ஏ அடிக்கல்
செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் கேபிசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 32 இலட்சம் மதிப்பீட்டில் 2000 சதுர அடியில் 3 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா பள்ளி தலைமையாசிரியர் பிரேம்குமாரி தலைமையில் நடைபெற்றது.
செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன், புழல் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், பேரூராட்சி தலைவர் கு.தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், புழல் ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.செல்வமணி, செங்குன்றம் நகர அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், மாவட்டப் பிரதிநிதி ஆர்.டி.சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.திராவிடமணி, பி.அன்பு, ஆர்எம்பிகுமார், என்எம்டி. இளங்கோவன், ஜெ.ஜெய்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் இரா.ஏ.பாபு, எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், கா.கு. இலக்கியன், ஆர்இஆர். ராஜசேகர், முன்னாள் நிர்வாகிகள் ஜெ.ரகுகுமார், கே.சுந்தரம், கவுன்சிலர்கள் பபிதா பால்ராஜ், லதா கணேசன், என்.சகாதேவன், கே.கே. ராமன், வினோதினி பாலாஜி, கழக முன்னோடிகள், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் வி.சங்கர், எஸ்.வடிவேலு, ஆர்.திருமலை, ஆர்.சிவா, சி.ஏழுமலை, வி.மதிவாணன், ஆர்இஆர். சூரியநாராயணன், என்.பாலாஜி, ஏ.எஸ். பார்த்திபன், என்.அப்துல் சமது, ஆர்கேஎஸ்.சுரேஷ், ஜெ.செல்வகுமார், கேஎல்என். லெனின்குமார், எம்.மோகன்குமார், ஆர்.டி.சுதாகர், எஸ்.எம். முனுசாமி, என்.ஷாம் கார்த்திக், டி.காஜா மொய்தீன், கே.வாசுதேவன், பி.எல். சரவணன், எஸ்.அறிவுநிதி, கே.யுவராஜ், பி.ஸ்ரீதர், ஆர்.அரிகிருஷ்ணன், எம்எஸ்கே. மோகன சுந்தரம், ஏ.பி. பீட்டர் செல்வம், ஆர்இவி. கிருஷ்ணகுமார், நாகேந்திரன், பி.மோகன், இம்மானுவேல் பிரபு, முரளி, ராஜேஷ்குமார், சுரேஷ், சுரேஷ் பாபு, என்.பாஸ்கர், மணிவாசகம், முருகன், ஜானகி, பிரபா, சிலம்பரசன், மலர் மன்னன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒப்பந்தக்காரர் லட்சுமி நாராயணன், இளநிலை பொறியாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஜெயபாக்கியம் நன்றி கூறினார்.