மாணவியர்களுக்கான மனநல விழிப்புணர்வு கலந்தாய்வு முகாம்
செங்குன்றம் அடுத்த புழலில் மாணவியர்களுக்கான மனநல விழிப்புணர்வு கலந்தாய்வு முகாம் நடைபெற்றது.;
செங்குன்றம் அடுத்த புழலில் மாணவியர்களுக்கான மனநல விழிப்புணர்வு கலந்தாய்வு முகாம்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த புழலில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து மாணவியர்களுக்கு மனநல விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு முகாமை ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.
கல்லூரியின் செயலாளரும் பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான ஏ.என்.எஸ். கோவிந்தசாமி முற்சியால், மாவட்ட மனநல திட்டம் திருவள்ளூர் மாவட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு விழிப்பு உணர்வை முகாமை நடத்தினர்.
மாவட்ட மனநல ஆலோசகர் டாக்டர் சகுந்தலா தேவி, மன அழுத்தம் மேலாண்மை பற்றியும், சாட்டிலைட் மனநல ஆலோசகர் டாக்டர் காயத்ரி மனநல விழிப்பு உணர்வு பற்றியும், சமூக நல ஆர்வலர் எஸ்.சுபாஷ் மனநல ஆலோசனை பற்றியும் கலந்துரையாடினர். புழல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஏ.ஜி. ராஜன் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.ராமகிருஷ்ணன், பள்ளியின் முதல்வர் ஹெச். ராஜ ராஜேஸ்வரி, பள்ளி - கல்லூரியின் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
கலந்தாலோசனையில் நல்ல கருத்துகள், ஆலோசனைகள் எடுத்துரைக்கப்பட்டன. பெற்றோர்கள், மாணவிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர். மாணவிகள், பெற்றோர்கள் கூறுகையில் இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கல்லூரியின் செயலாளரும் பள்ளியின் நிர்வாகியுமான ஏ.என்.எஸ். கோவிந்தசாமி அனைவரையும் பாராட்டினார். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த கல்லூரியின் மேலாளர் கே.முத்து சேகருக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக எலெக்ட்ரிக்கல் துறை தலைவர் ஜெ.ஜான்சிராணி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி முதல்வர் ஹெச்.ராஜ ராஜேஸ்வரி நன்றி கூறினார்.