புள்ளிலையன் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் விழிப்புணர்வு முகாம்
செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவமுகாம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் சீரிய திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் மதுமிதா, விளாங்காடுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கீதா மற்றும் புள்ளிலையன் ஊராட்சியின் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட குழு உறுப்பினர்களான யாமினி, டாக்டர் திருக்கார்த்திக், டாப்ஸ் .முரளி மற்றும் செவிலியர் ஜான்சி ஆகியோரின் ஒத்துழைப்போடு திட்டம் தொடர்பான செயல்முறைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாரதி மற்றும் பிரேமலதா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.