அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.;
வடகரை அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 40 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கி பேசியதாவது: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஊக்கத் தொகை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி வரும் நம் முதல்வர் தாயில்லத்தோடு பார்த்து செய்து வருவதாகவும் தமிழகத்தை பின்னோக்கி அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்ப்பதாகவும், ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்ற திட்டங்களை நம் முதல்வர் மக்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.
இதில் புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன், புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணிதிருமால், துணை பெருந்தலைவர் சாந்திபாஸ்கர், மாவட்ட பிரிதிநிதி ரமேஷ், மாவட்ட தொண்டரணி தலைவர் முருகன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.