செங்குன்றம்: வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரூ.10000 கொள்ளை
செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் 10000ரொக்கம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் சிறுங்காவூர் பகுதியை சேர்ந்தவர் மகளிர் குழு தலைவி மேரி.. இவர் பணி நிமித்தமாக தமது வீட்டை பூட்டி விட்டு, வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10000ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.