தற்காலிக மின் இணைப்பை நிரந்தரமாக்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

தற்காலிக மின் இணைப்பை நிரந்தரமாக்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-06-30 04:45 GMT

வணிக ஆய்வாளர் அன்பழகன்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(42). இவர் தன் மனைவி பெயரில் வீட்டுமனை 1 வாங்கியுள்ளார். அந்த மனையில் வீடு கட்டுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ள தற்காலிக மின் இணைப்புக்காக வீராபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்று பணிகளை முடிந்த பின்னர் நிரந்தர மின் இணைப்பு மாற்றி வழங்குமாறு மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளரான அன்பழகன்(57) அவரிடம் மனு சுரேஷ் அளித்திருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட வணிக ஆய்வாளர் அன்பழகன் இதனை மாற்றுவதற்கு வேலைகள் இருப்பதாகவும், அதற்கு ரூபாய் 2000 வழங்கினால் உடனடியாக இணைப்பை மாற்றி தரப்படும் இல்லையெனில் மாதக்கணக்கில் ஆகிவிடும் என்று சுரேஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத வீட்டின் உரிமையாளர் இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சென்று புகார் அளித்தார் புகாரின் பேரில் ரசாயனத் தடவிய நோட்டுக்களை சுரேஷிடம் அதிகாரிகள் கொடுத்து ஆய்வாளரிடம் வழங்குமாறு கூறியுள்ளார்.

இதனைப் பெற்று வணிக ஆய்வாளர் அன்பழகன் ரூபாய் நோட்டுகள் வழங்கியபோது மறந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக வணிக ஆய்வாளர் அன்பழகனை பிடித்து லஞ்சம் கேட்ட கூட்டத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News