இலாஹி மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
111 பேருக்கு இலவச கண் பரிசோதனையும், 37 பேருக்கு இலவச கண்ணாடியும், 8 பேர் அறுவை சிகிச்சைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்;
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர், தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கங்கள், சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சைகளை பெற்றனர். செங்குன்றம் இலாஹி மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளியின் தாளாளர் மௌலவி காஜா மொய்னுத்தீன் ஜமாலி தலைமை வகித்தார்.
சென்னை சோஷியல் லயன்ஸ் சங்க தலைவர் எம்.அன்சர் பாத்திமா, வட்டார தலைவர்கள் நண்பன் எம்.முகமது அபுபக்கர், கா.ஷண்முக சுந்தரம், மாவட்ட தலைவர் ஜி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி குமார், 5வது வார்டு கவுன்சிலர் தெய்வானை கபிலன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி இலவச மூக்கு கண்ணாடியை வழங்கினர்.முகாமில் 111 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனையும், 37 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடியும், 8 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நூற்றுக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கும் இலவசமாக கண் சம்பந்தமான பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்தனர்.இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நாகராணி, மார்ட்டின், சமூக ஆர்வலர் தீன் முகம்மது மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.