வெள்ளனூர் ஊராட்சியில் இரண்டு பள்ளிகளில் கட்டிட அடிக்கல் நாட்டு விழா
வெள்ளனூர் ஊராட்சியில் இரண்டு பள்ளிகளில் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதி வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளனூர் ஊராட்சி கொள்ளுமேடு ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் புதிய வகுப்பறை கட்டுவதற்கு ஆரிக்கம்பேடு ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலா ரூ. 28 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் கொள்ளுமேடு அரசு உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்ட போது, தலைமையாசிரியர் சிவானந்தம் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர கோரிக்கை விடுத்தார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரியும் மகளிர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஆரிக்கம்பேடு இடுகாட்டில் தகனமேடு அமைக்க அடிக்கல் நாட்டினார். தகன மேடை அமைய நிதி ஒதுக்கிய மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்களும் ஊராட்சி மன்றத் தலைவரும் நன்றி தெரிவித்தனர்.
காட்டூர் மின்வாரியம் எதிரில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்காக புதிய இடுகாடு அமைத்து தர ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் கோரிக்கை விடுத்தார். அவ்விடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் உடனடியாக பேசி ஏற்பாடு செய்வதாகவும் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. கூறினார்.
இந்த நிகழ்வுகளில் உடன் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.தயாளன், மாவட்ட கவுன்சிலர் மோரை சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குணா தயாநிதி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, , வில்லிவாக்கம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வெள்ளச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பொன் மதுரை முத்து, உதவி பொறியாளர் யாஸ்மின், பள்ளி தலைமயாசிரியர்கள் சிவக்குமார், பசுபதி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.