ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு புழல் பகுதியில் அன்னதானம்
ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு புழல் பகுதியில் காங்கிரசார் அன்னதானம் வழங்கினார்கள்.;
புழல் பகுதியில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ௫௩வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களிலும் காங்கிரசார் கட்சி கொடி ஏற்றியும் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
அந்த வகையில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட புழல் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக புழல் பகுதி தலைவர் சந்திரசேகர் ஏற்பாட்டில் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி சென்னை 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை வாங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி முதன்மை துணை தலைவர் பாபு புழல் பகுதி துணைத்தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.