சென்ட் பாட்டில் சேமிப்பு குடோனில் தீ விபத்து

புழல் அருகே கதிர்வேடு பகுதியில் சென்ட் பாட்டில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சென்ட் பாட்டில்கள் தீயில் எரிந்தது.;

Update: 2024-06-29 10:00 GMT

சென்ட் பாட்டில் சேமிப்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

புழல் கதிர்வேடு பகுதியில் வாசனை திரவிய கிடங்கில் பயங்கர தீவிபத்து  ஏற்பட்டது. 5 மணி நேரம் போராடி தீயணைப்பு படை வீரர்கள்  தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி 31-வது வார்டு புழல் அருகே உள்ள கதிர்வேடு பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் ஓகே ஏஜென்சிஸ் என்னும் வாசனை திரவியங்கல்(சென்ட் பாட்டில்கள்)சேமிப்பு கிடங்கு இதன் உரிமையாளர் கணேசன் என்பவர் நடத்தி வருகின்றார்.

இந்த கிடங்கில் தீபக் என்பவர் மேற்பார்வையில் 4-பேர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் வழக்கம் போல் பணியாற்ற வந்த பணியாளர்கள் கிடங்கில் தீபற்றி எரிந்து கொண்டு பெரும் புகை மண்டலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதணைத்தொடர்ந்து பணியாளர்கள் மேற்பார்வையாளர் தீபக்கிடம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு சம்பவம் குறித்து கூறியதில் உடனடியாக மேற்பார்வையாளர் தீபக் கிடங்கிற்கு வந்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு புகார் அளித்தனர்.


புகாரின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.ஆனால் தீ மளமளவென்று கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை கட்டுபடுத்த முடியாததால் மேலும் அம்பத்தூர், கொளத்தூர், மாதவரம் போன்ற தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த தீயணைப்பு நிலையங்களிலிருந்து வாகனங்கள் வரவைக்கப்பட்டு பின்னர் சுமார் 5 மணிநேரம் போராடி தீயை முறறிலுமாக கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள வாசனை திரவிய பாட்டில்கள் தீயில் கருகி சேதமாகி விட்டது.

இது குறித்து புழல் சரக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்து எப்படி நடந்தது குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News