மாதவரம்; மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
மாதவரம் அருகே மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
மாதவரம் அருகே இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி காட்டுநாயக்கன்நகர், பழங்குடிநகர், டாக்டர் வரபிரசாத்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 27-ம் ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் 3-ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய நிர்வாகிகள் தலைவர் முருகேசன், செயலாளர் குமார், பொருலாளர் மணிகண்டன் மற்றும் கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆலய துணைத்தலைவர்கள் முருகன், பாண்யராஜ், மாணிக்கம், பழனிவேல்ராஜ், சக்திவேல், துணைச்செயலாளர்கள் முருகவேல், ஆறுமுகம், முத்துச்சாமி, விஜயகுமார், வெங்கடேசன், வேங்கையன் ஆகியோர் முன்னிலையில் கணபதி பூஜை, பந்தகால்நடுதல், காப்புகட்டுதல், பால்குடம் எடுத்தல், கங்கைதிரட்டுதல், கரகம்எடுத்தல், சீர்வரிசைஎடுத்தல், அக்கினி கப்பறைஎடுத்தல், கூழ்வார்த்தல் கும்பம் படையல்பூஜை மற்றும் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கௌரவதலைவர்கள் காமாட்சியப்பன், சுப்பிரமணி, முருகேசன், வீரராகவன், இசக்கியப்பன், சின்னமுருகன், நாகராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் காப்புகட்டிய பக்தர்கள் தீகுண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திகடனை பூர்த்தி செய்தனர்.
இத்திருவிழாவிற்கு ஆலய ஆலோசகர்கள் குமார், பாண்டி, மணிகண்டன், மாரிராஜா, முருகன், ராஜேஷ், ரவி, சுடலைமணி, பரமானந்தம், சிவசாகர், சின்னபாண்டி, கார்த்திக், கோவிந்தராஜ், வெங்கடேசன், நாகராஜ், முனியாண்டி, செல்வம், பாபு, ரவி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கினர்.
முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலாநடைபெற்றது.