‘ கவனமா ஓட்டுங்க’ - வாகன ஓட்டுனர்களுக்கு போலீசார் ‘அட்வைஸ்’

பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து, போலீசார் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டது.;

Update: 2023-02-17 10:45 GMT

வாகன ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், புழல் அடுத்த அம்பத்தூர் சாலையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடகை மினி வாகனங்களில் பள்ளி மாணவி மாணவிகளையும் குழந்தைகளையும் அழைத்து வரப்பட்டு பின்னர் மாலை பள்ளி முடிந்த பின்பு அவர்களை வாகனங்களில் ஏற்றுக் கொண்டு வீட்டில் கொண்டு போய் விடுவது வழக்கம்.

இந்த வாகன ஓட்டிகளுக்கு, கலாம் மக்கள் மன்றத்தின் சார்பில் புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம்,  உதவி ஆய்வாளர் ராஜா வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளின்படி வாகனத்தை இயக்கவும் அதில் முறையாக சென்சார் கருவிகளை பொருத்தி மிகவும் கவனத்துடன் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பின்னர் வீட்டில் கொண்டு போய் சேர்க்குமாறும் ஓட்டுனர்கள் தீய பழக்கங்களை விட வேண்டும் குடிபோதையில் வாகனங்களை இயக்க வேண்டாம் எனவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறந்த ஒரு பாதுகாவலராக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் முதலாவதாக ஓட்டுனர்களின் சங்கப் பெயர் பலகையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியின் முன்னதாக குத்துவிளக்கேற்றி பெயர் பலகையை திறந்து வைக்கப்பட்டது .இதில் கலாம் நற்பணி மன்ற சமூக ஆர்வலர் கண்ணன் ,சயீதா, துரை, ராஜன், வழக்கறிஞர்கள் சங்கர் கணேஷ், சீனிவாசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் ஓட்டுநர்கள் அனைவருக்கும் சீருடைகள் வழங்கப்பட்டது.

Similar News