சோழவரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

சோழவரத்தில் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்.

Update: 2022-01-05 05:45 GMT

சோழவரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்.

சோழவரத்தில் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட சோழவரம் நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கும்தமிழக அரசு வழங்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், மளிகை சாமான்கள் மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் தரமான 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி, இதனை தொடங்கியுள்ளார். இதேபோன்று, அனைவருக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், பொன்னேரி துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி டி.ஜே.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு பெரும் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக்குழு துணை தலைவர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் லக்ஷ்மி முனிகிருஷ்ணன், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News