நெற்குன்றம் பகுதியில் மாணவர்களுக்கு கவுன்சிலர் கறி விருந்து
சென்னை நெற்குன்றத்தில் 10 மற்றும் 12 வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.;
சென்னை மாநகராட்சி கோயம்பேடு அருகே நெற்குன்றம் 145.வது வார்டு பகுதியைச் சேர்ந்த 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக, புத்தகப் பை, கறி விருது,உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி 145 வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஏற்பாட்டில் அவரது சொந்த செலவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட 10,12 ஆம் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டனர்.
இதில் இந்த வார்டில் வசிக்கும் 10,12 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடகமும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.மேலும் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.