செங்குன்றத்தில் மோடி அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
செங்குன்றத்தில் மோடி அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
செங்குன்றத்தில் மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் நடைப்பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி அரசை கண்டித்து நடைப்பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை மாநிலத் துணைத் தலைவர் வெள்ளிகுமார் தலைமை வகித்தார்.செங்குன்றம் நகர தலைவர் கோபி,மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் மீரான்,மாநில பொதுச் செயலாளர் சிவராமகிருஷ்ணன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், தமிழ்நாடு ஆராய்ச்சித்துறை திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் மகிமை ராஜ் வரவேற்புரையாற்றினார்.
இதில் கண்டன உரையாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநிலத் தலைவர் மாணிக்கவாசகம்,திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் லயன்.டி.ரமேஷ்,தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை அலி அல் புகாரி,தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் குபேந்திரன், உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுகண்டன உரையாற்றினர்.
அவர்கள் பேசுகையில் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு தான் முக்கிய காரணம் என்றும், அதனை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார் என்றும் மதத்தையும்,ஜாதியையும், பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் மத்திய அரசினை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக செங்குன்றம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் மோடி அரசை கண்டித்து முழக்கமிட்டு நடைபயணமாக ஊர்வலமாகச் சென்றனர். இதில் மாநில பொதுச் செயலாளர் மோகன், வெங்கடேசன்,வட்டாரத் தலைவர் புருஷோத்தமன்,உள்ளிட்ட திரளான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் மாவட்ட ,ஒன்றிய ,நகர, உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.