இருசக்கர வாகன விபத்தில் சினிமா நடிகர் பலி
செங்குன்றம் அருகே நடத்த பைக் விபத்தில் புதுமுக நடிகர் உயிரிழந்தார்;
சாலை விபத்தில் உயிரிழந்த புதுமுக நடிகர் ஜெயகுமார்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள ஜீவா தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது40). இவர் புதிதாக எடுக்கப்பட்டு வருகின்ற செங்குன்றம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஜெயக்குமார் சென்னையில் படப்பிடிப்பை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆலமரம் பகுதி அருகே சாலையை கடந்தபோது அவருக்கு எதிரே வந்த எல்லையம்மன் பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 24) என்பவர், ஜெயக்குமார் வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேராக வேகமாக மோதியுள்ளார
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரை மீட்டு பாடியநல்லூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .
மேல் சிகிச்சைக்காக ஜெயக்குமாரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக . உயிரிழந்தார்
இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.