நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தேர்வு
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்
செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 10 இடங்களை திமுக கைப்பற்றியது. 2 அதிமுக, 5 சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் 1 காங்கிரஸ் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் நடைபெற்ற பேரூர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழரசி குமார் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் துணைத்தலைவராக ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் பேரூராட்சி செயலர் பாஸ்கரன் தலைமை தாங்கி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.