கார் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் தீ விபத்து:போலீசார் விசாரணை

Car Repair Industry Fire மாதவரம் அருகே கொசப்பூரில் உள்ள கார் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-02-21 05:15 GMT

மாதவரம் அடுத்த கொசப்பூரில் தனியாருக்கு சொந்தமான கார் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Car Repair Industry Fire

திருவள்ளூர் மாவட்டம், சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூரில் அரசு நகர்ப்புற மருத்துவமனை பின்புறம் பழைய கார்களை பழுது செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றன இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.இதில் பழைய கார்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த ஆயில்கள் மற்றும் டயர்கள் மற்றும் காரின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் அடைந்தது.மேலும் அந்த தீயானது வானுயிர அளவு கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.இந்த தீ விபத்தானது அரசு மருத்துவமனை பின்புறம் என்பதால் நோயாளிகளும் அச்சத்தில் இருந்தனர்.ஆனால் இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.மேலும் தகவல் அரிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார்10 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீயினை முழுவதுமாக அணைத்த பிறகு தான் இதனுடைய சேதம் மதிப்பு எவ்வளவு என்றும் எதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டது எனவும் விசாரணை மூலம் தெரியவரும்.இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் காணப்பட்டது.மேலும் கடும் தீ மூட்டத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டதால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News